கரைச்சி பிரதேச சபையினால் அறவிடப்படும் ஆதன வரியை இவ்வருடம் இறுதி நாளிற்கு முன்னர் குறைக்கப்படும்…

கரைச்சி பிரதேச சபையினால் அறவிடப்படும் ஆதன வரியை இவ்வருடம் இறுதி நாளிற்கு முன்னர் குறைக்கப்படும் என பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற விசேட அமர்வில் குறித்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையினால் அறவிடப்பட்டுவரும் ஆதன வரியினை குறைப்பபது தொடர்பான விசேட அமர்வு இன்றுஇடம்பெற்றது. குறித்த விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையில் தெரிவான சிறிலங்கா சுந்திர கட்சி உறுப்பினர்களான  விஸ்வநாதன் வித்தியானந்தன், வேலாயுதம் கஜன் இருவரினால் குறித்த விடயம் தொடர்பில் விசேட அமர்வு நடார்த்துமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. குறித்த கோரிக்கை கடிதத்தில் குறித்த உறுப்பினர்கள் அடங்கலாக 13 பேர் உறுப்பினர்கள் ஒப்பமிட்டு சமர்ப்பித்தனர்.
இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பான விசேட அமர்வு இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே குறித் தீர்மானம் எடுக்கப்பட்டது.
குறித்த விடயம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் விஸ்வநாதன் வித்தியானந்தன் சமர்ப்பித்தார். தொடர்ந்து பிரதேச சபை உறுப்பினர்களால் குறிதத் விடயம் விவாதிக்கப்ட்டது. இந்த நிலையில் சபை உறுப்பினர்கள் ஆதன வரியை குறைக்க வேண்டும் என்ற விடயத்தினை ஏற்றுக்கொண்டனர். சபையில் ஆதன வரி குறைப்பு தொடர்பில் இவ்வருடம் மார்கழி மாதம் 31ம் திகதிக்க முன்னர் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவோம் என சபையின்  உப தவிசாளர் தெரிவித்தார். குறித்த விடயத்தினை இறுதி தீர்மானமாக தவிசாளர் அறிவித்தார்.

எதிர்வரும் மார்கழி மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அனைத்து உறுப்பினர்களும் மக்கள் கருத்தினை கேட்டு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.