வார இறுதியில் கூடுதலான பொலிஸ் வீதி தடைகள்……

வார இறுதியில் பெரும் எண்ணிக்கையில் பொலிஸ் வீதி தடைகள் இடம்பெறும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வார இறுதி என்பதினால் பொது மக்கள் பயணங்களைக் கட்டுப்படுத்தி கொள்ளுமாறு பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வார இறுதியில் பயணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அவர் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
வார இறுதியில் கூட்டங்கள், விளையாட்டு போட்டிகள் என்பன நடத்தப்படுவது முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை வார இறுதி தினமாகும். பொது மக்கள் தமது நேரத்தை வீடுகளிலேயே கழிக்குமாறும், கொவிட் தொற்றை தடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பை வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்ட விதிகளை மீறியமை தொடர்பில் இதுவரையில் 2,532 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.00 மணியுடனான 24 மணித்தியாலய காலப்பகுதியில் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் 26 வாகனங்கள் பொலிசாரால் பொறுப்பேற்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரையில் பொலிசாரால் பொறுப்பேற்க்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 382 ஆகும்.

முக கவசம் அணியாமை, சமூக இடைவெளியை பேணாமை ஆகியவற்றின் காரணமாக நேற்றைய தினம் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 96 பேர் இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.