இறக்காமம் பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு முதற்கட்டமாக உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

இறக்காமம் பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணி  கடந்த வெள்ளிக்கிழமை  முதற்கட்டமாக 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறக்காம பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நஹீஜா முஸப்பிர் தலைமையில்   ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் திருமதி றிம்ஷியா அர்சாட், கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர், ஹெசேரத் பண்டார பொதுச் சுகாதர பரிசோதர் ரஹ்மான் உட்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இறக்காமம் பிரதேசத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இனம்கானப்பட்ட இருவர் அடங்களாக 06 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்னும் பலரது பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை இனம்காணப்பட்டு சுய தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் தவிர்ந்த மேலும் 62 குடும்பங்களைச் சேர்ந்த 251 நபர்கள் இதுவரை இறக்காமம் பிரதேசத்தில் சுய தனிமைப் படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
(நூருள் ஹுதா உமர்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.