கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி அக்கரைப்பற்று மருதையடிப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடு…

கொவிட்-19 தொற்றிலிருந்து நாடும் நாட்டு மக்களும் விடுபட வேண்டி பிரதமரின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்து ஆலயங்களில் விசேட வழிபாடு! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால், இலங்கைத் திருநாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவரும், கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மீள்வதற்காக, அருளாசி வேண்டி நாடு முழுவதிலும் உள்ள இந்து ஆலயங்களில் விசேட பிரார்த்தனை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

விசேடமாக ஆலயங்களில் மஹாம்ருத்யுஞ்ஜய ஹோமம் மற்றும் விசேட பிரார்த்தனை வழிபாடுகளைச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் வழிகாட்டலில் இன்று அக்கரைப்பற்று மருதையடிப் பிள்ளையார் ஆலயத்தில்  (16.11.2020) காலை  கிரிகைகள் யாவும் வாமதேவ சிவாச்சாரியார் சிவஸ்ரீ புண்ணிய கிறிஸ்ன குமார  குருக்கள்  தலைமையிலும் மேலும் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கஜமுக சர்மா ஆகியோரினால் இடம்பெற்றது.

இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் வி.பவாகரன், அம்பாறை மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜ் ,ஆலையடி வேம்பு பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி.தேவதாஸ் நிசாந்தினி மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ,ஆலய நிர்வாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.