சதுப்பு நிலங்களில் சட்ட விரோதமாக குடியேறினால் சட்ட நடவடிக்கை……

சாம்பல் தீவு சதுப்பு நிலத்தை சட்டவிரோதமாக நிரப்பியவர்களை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்படும் என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுரதா யஹம்பத் தெரிவித்தார்.

இன்று (17) காலை திருகோணமலை கப்பல் துறை பகுதியில் நடைபெற்ற  சதுப்புநிலத்தில் மரம் நடும் திட்டத்தின் போது தெரிவித்தார். 245 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பகுதி, முன்னர் பல்வேறு நபர்களால் சட்டவிரோதமாக  நிரப்பப்பட்டிருந்ததுடன், கட்டிடங்கள் கட்டுவதை உடனடியாக நிறுத்த ஆளுநர் உத்தரவிட்டார்.

இதையடுத்து, முன்னாள் திருகோணமலை மாவட்ட செயலாளர் உடனடியாக ஒரு அறிக்கையை அவரிடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். அந்த அறிக்கையின்படி, ஏரியை நிரப்ப பல்வேறு அரசு நிறுவனங்களால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் தோன்றும் சாம்பல் தீவு சதுப்பு நிலத்தினுள்   கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்று ஆளுநர் கூறினார்.

(ஹஸ்பர் ஏ .ஹலீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.