நிந்தவூரில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஆசி வேண்டி விசேட துஆ பிரார்த்தனை…

நூருள் ஹுதா உமர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச  அவர்கள் பதவியேற்று  ஒரு வருட நிறைவை முன்னிட்டும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச  அவர்களது 50 வருட வெற்றிகர அரசியல் பயணத்தின் பூர்த்தியை முன்னிட்டும், அத்தோடு  அவர்களது 75ஆவது ஆண்டு  பிறந்த தினத்தை முன்னிட்டும் விசேட துஆ பிரார்த்தனையும் சமய நிகழ்ச்சியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின்  இணைப்பாளரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளருமான  ஏ.எல்.மீராசாஹிபு அவர்களின் தலைமையில் நிந்தவூரில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  காரியாலயத்தில் இன்று (20) நடைபெற்றது.
இங்கு மௌலவி அல் ஹாபிழ் முஜிபுர் ரஹ்மான்  அவர்களால் விசேட பிரசங்கமும், துஆ பிரார்த்தனையும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் செயற்பாட்டாளருமான  ஏ.எல்.மீராசாஹிபு, தமது உரையில் எமது முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு என்றும் நன்றியுடன் இருப்பதாகவும் அவர்களால் வழங்கப்படும்  அபிவிருத்திகள்   இன்னும் எம் பிரதேச மக்களுக்கு கொண்டுவர துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன  என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உலமாக்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், புத்திஜீவிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்