ஓட்டமாவடி பிரதேச செயலாளருடன் ஊடகவியலாளர்கள் சந்திப்பு…

கடந்த திங்கட்கிழமை 16-11-2020 கோறளைப்பற்று ஓட்டமாவடி பிரதேச செயலாளராக கடமை பொறுப்பேற்றுள்ள வீ.தவராஜாவுக்கும் பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று (19) பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

கல்குடா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் தலைமையிலான இவ் விஷேட சந்திப்பின்போது புதிய பிரதேச செயலாளருக்கு வாழ்த்து தெரிவித்த ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நல்லிணக்க செயற்பாடுகளும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு மற்றும் அரசாங்கத்தினால் பிரதேச செயலகங்களினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்ளை மக்கள் மயப்படுத்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

இதன் போது பிரதேச ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்க காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட காணி பங்கீடு, வீடமைப்பு முறைமையில் கல்குடா மீடியா போரத்தில் அங்கம் வகிக்கும் ஊடகவியலாளர்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் பிரதேச ஊடகவியலாளர்களினால் பிரதேச செயலாளரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச செயலாளரின் பங்களிப்பினை பெற்றுக்கொள்வது தொடர்பில் அங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஊடகவியலாளர்களுடன் நான் நெருக்கமான உறவில் உள்ளவன். எனவே, ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நான் இனம்கண்டு அதனை என்னால் முடியுமான வகையில் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பேன் என்று பிரதேச செயலாளர் குறித்த சந்திப்பின்போது தெரிவித்தார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்).

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்