2021 வரவு செலவுத் திட்டம் இரண்டாம் வாசிப்பு:வாக்கெடுப்பு இன்று

வரவு செலவுத் திட்டப் பிரேரணையின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை ஐந்து மணிக்கு பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இடம்பெறும். ஞாயிறு தவிர்ந்த அனைத்து நாட்களிலும் தொடர்ச்சியாக பத்து தினங்கள் குழுநிலை விவாதம் நீடிக்கும்.

23ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம், உயர் நீதிமன்றம், சுயாதீன ஆணைக்குழுக்கள் முதலான 25 நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீடுகள் பற்றி விவாதிக்கப்பட இருக்கிறது.

அடுத்த மாதம் பத்தாம் திகதி வரவு செலவுத் திட்டப் பிரேரணையின் மூன்றாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கடந்த 17ஆம் திகதி வரவு செலவுத் திட்டப் பிரேரiணை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்