பிரபாகரனை போல் சண்டித்தனம் காட்ட வேண்டாம் என சாணக்கியனை எச்சரித்த அமைச்சர்

மக்களின் உரிமைகளுக்காக பேசினால் நான் பயங்கரவாதியா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தும் விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று வாதபிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல்வேறு விடயங்களை முன்வைத்து உரையாற்றியிருந்தார்.

இதன்போது குறிக்கிட்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் விடயத்துடன் சம்பந்தம் இல்லாதவகையில் எம்.ஏ சுமந்திரனுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார். இதற்கு எதிராக இரா.சாணக்கியன் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனுக்கு ஆதரவாக பேசிய இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சா “சுமந்திரன்  பற்றி  பேசும்போது, அவர் இவ்விடயத்தில் இல்லை எனவே அவர்தொடர்பாக கதைக்க வேண்டாம் என கூறினார்.

அவ்வாறாயில் பஷில் ராஜபக்ஷ பற்றி நீங்கள் கதைக்கின்றீர்கள். முதலில் நீங்கள் அமருங்கள், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு காலத்தில் இருந்த பயங்கரவாதிகள் போன்று இவ்விடத்தில் செயற்பட வேண்டாம்.

நீங்கள் பயங்கரவாதியல்ல. பிரகபாகரன் போன்று இந்த நாடாளுமன்றத்தில் செயற்பட முடியாது. பிரபாகரனை போன்று மக்களை கொல்ல முடியாது இந்த இடத்திற்கு வந்து.

உங்களுக்கு முடியுமானால் சுமந்திரன் பற்றி பேசுவதற்கு, எனக்கும் முடியும். பஷில் ராஜபக்ஷ இந்த நாடாளுமன்றத்தில் இருப்பது தொடர்பில் கதைப்பதற்கு. இதற்கு முன்னர் உங்களது அரசாங்கம் தான் ஆட்சியில் இருந்தது.

மேலும் கடந்த அரசாங்கம் நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சி செய்தது. அந்த காலக்கட்டத்தில் மக்களுக்கு சாதாரன செயற்றிட்டங்களை கூட முன்னெடுக்கவில்லை. இவ்வாறு எதனையும் செய்யாது விடுத்து தற்போது இந்த இடத்தில் வந்து பொய்களை கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.

இவ்வாறு எதனையும் செய்யாது விடுத்து தற்போது இந்த இடத்தில் வந்து பொய்களை கூறி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்.’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் இராஜாங்க அமைச்சர் நிமல் லண்சாவின் கருத்து குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் உரிமைகளுக்காக பேசினால் நான் பயங்கரவாதியா எனவும் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.