வடக்கில் குறும் திரைப்பட விழாவை ஏற்பாடு செய்யவுள்ளதாக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவிப்பு

வடக்கில் குறும் திரைப்பட விழாவை ஏற்பாடு செய்யவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தள்ளார்.

யாழ்ப்பாணத்தில் குறும்படம் என்பது பிரபலமான ஊடகமாகக் காணப்படுகிறது. எனவே, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்துடன் இணைந்து, யாழ் குறும்பட விழாவையும், தேசிய குறும்பட விழாவையும் ஏற்பாடு செய்யத் திட்டமிடுவதாக அமைச்சர் கூறினார்.

இத்தகைய விழாக்கள் வடக்கின் கலாசார அம்சங்களை வெளிக்கொணர்வதற்கு உதவியாக அமையுமென அவர் தெரிவித்ததாக தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்