ஒரே நாடு ஒரே சட்டம் நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரமா

ஒரே நாடு ஒரே சட்டம் நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரமா என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார்.
இன்று  ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இன்று அரசாங்கம் ஒரே நாடு ஒரே சட்டம் என கூறினாலும் ராஜபக்ஸ சகோதரர்களின் ஆதரவாளர்களுக்கு  ஒரு சட்டமும் ஏனையவர்களுக்கு இன்னொரு சட்டமுமே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கொரோனா அச்சத்தால் நாட்டின் பல பகுதிகளில் வணக்கஸ்தலங்கள் மூடப்பட்டுள்ளன.முஸ்லிம்கள் தமது ஜும்மா தொழுகையை கூட நிறைவேற்ற முடியாமல் உள்ளனர்.தமிழ் சகோதரர்கள் தமது தீபாவளி பண்டிகைக்கு கூட கோவிலுக்கு செல்லமுடியாமல் இருந்தனர்.
ஆனால் பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு மூடப்பட்டுள்ள வணக்கஸ்தலங்களை திறந்து  அவருக்கு ஆசி வேண்டி வழிபாடுகள்  இடம்பெற்றன.குறிப்பாக பள்ளிவாயல்களில் உருவப்படம் எதனையும் முஸ்லிம்கள் காட்சிப்படுத்துவதில்லை ஆனால் பிரதமரின் பெரிய உருவப்படம் பள்ளிவாயல்களில் காட்சிப்படுத்தப்பட்டு துஆ பிராத்தனைகள் இடம்பெற்றுள்ளமை கண்டிக்கத்தக்கது.
 அதுபோன்று மாவீரர் நினைவுதினத்துக்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ளன.ஆனால் மக்கள் விடுதலை முன்னணியினர் இதுபோன்ற நினைவு தினம் அனுஸ்திக்கும்போது எந்த ஒரு எதிர்ப்பும் வெளியிடப்படவில்லை.
சிறுபான்ன்மையினருக்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டங்கள் பெரும்பான்மையினரை கட்டுப்படுத்துவதில்லை  என தெரிவித்தார்.
(பதுர்தீன் சியானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.