திருகோணமலை -கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்- மக்கள் கோரிக்கை

திருகோணமலை நகராட்சி மன்ற எல்லைப் பகுதிக்குட்பட்ட இடங்களில் வீதியில் திரிகின்ற கட்டாக்காலி மாற்று உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு
புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதுகுறித்து நகர சபையிடம் கேட்டபோது-
திருகோணமலையை அண்மித்த பகுதியில் தற்பொழுது வீதிகளில் அதிகளவிலான மாடுகள் நிற்பதால் வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவதாகவும் மாட்டு உரிமையாளர்கள் தங்களது மாடுகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.
கட்டாக்காலி மாடுகளை குறைக்கும் நோக்கில் மாடுகளை பிடித்து தண்டம் அறவிடும் பட்சத்தில் கூட கவலைக்கிடமாக செயற்படுவதாகவும்,  திருகோணமலை நகர எல்லைக்குள் கடந்த சில நாட்களாக அதிகளவிலான வீதி விபத்துக்கள் ஏற்பட்டு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் திருகோணமலை நகராட்சி மன்றத்தின் உயர் அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில்  தெருவில் நின்ற மாடுகள் பிடிக்கப்பட்டு வருவதாகவும்  17 மாடுகள் திருகோணமல  நகர மலையருவி காணிக்குள் கட்டப்பட்டுள்ளதாகவும், 21 மாடுகள் லிங்கராஜர் நகராட்சி மன்ற காணிக்குள் கட்டப்பட்டதாகவும்,உவர்மலையில்  12 மாடுகள் இன்னுமொரு காணிக்குள் கட்டப்பட்டுள்ளதாகவும்  நகரசபையினர் இதன்போது தெரிவித்தார்.
மாடுகளுக்கு உரிமையாளர்கள் யார் என விபரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும் மீண்டும் இவர்களுடைய மாடுகள் பிடிக்கப்பட்டால் பொலிசாரும் நகர சபையும் இணைந்து கால்நடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்