கடற்படைக் கொத்தணி 19 பேருக்குக் கொரோனா உறுதி

கடற்படையைச் சேர்ந்த 19 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இலங்கையில் கொரோனாவின் முதலாவது அலையின்போது வெலிசறைக் கடற்படை முகாமில் உருவாகிய ‘கடற்படை கொத்தணி’ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. அப்போது 900 இற்கும் மேற்பட்ட கடற்படையினரும் 300 இற்கும் மேற்பட்ட அவர்களின் உறவினர்களும்  தொற்றுக்குள்ளாகியிருந்தனர்.

இந்தநிலையில், கொரோனாவின் மூன்றாவது அலையில் தற்போது 19 கடற்படையினர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்