புலமைப்பரிசில் பரீட்சியில் சாதனை படைத்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு உதவிய மட்டு.வாலிபர் முன்னணி

2020ஆம் ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சியில் சித்தி அடைந்த அதி கஷ்டப்பிரதேச மாணவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினரால் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு கல்குடாகல்வி வலயத்தின் தொப்பிக்கல் மலை பிரதேசத்தில் அதி கஷ்டப்பிரதேசமான ஈரளக் குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலய மாணவி வி.நிரோ அண்மையில் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் 160வது புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருந்தார்.

அடிப்படை வசதிகள் அற்ற வறிய நிலையிலும் குறித்த மாணவி இச் சாதனையை படைத்திருந்தார்.  இம்மாணவியின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு புலம்பெயர் வாழ் வாலிபர் முன்னணியின் உறுப்பினர் ஒருவரின் நிதி உதவியில் உலர் உணவுப் பொருட்களும், மாணவியின் கற்றலின் மீதான ஆர்வத்தினை தூண்டும் வகையில் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் குறித்த மாணவியின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு நகர் பாடசாலை ஒன்றில் அவரின் கல்வி நடவடிக்கைகளை  தொடர்வதற்கான வசதிகளும் ஒழுங்கு செய்து கொடுக்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர் கிருஷ்ணப்பிள்ளை சேயோன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், பெரியவட்டவான் கண்ணகி வித்தியாலயத்தின் அதிபர், மாணவியின் வகுப்பாசிரியர், மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணியின் தலைவர் லோ.தீபாகரன் உள்ளிட்ட வாலிபர் முன்னணியின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.