வவுனியா- பனிக்கனீராவியில் விபத்து நால்வர் படுகாயம் !

வவுனியா- பனிக்கனீராவியில் இடம்பெற்ற தொடர் விபத்தில், நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து மரக்கறியுடன் மோட்டார் வாகனத்தில் பயணித்த இளைஞன், மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இதனை அவதானித்த அப்பகுதியில் வசித்துவரும் மூவர், அவருக்கு உதவி செய்வதற்காக சென்ற போது வேகமாக வந்த மகேந்திரா வாகனம் நால்வர் மீதும் மோதியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நால்வரும் பலத்த காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்