வவுனியா காத்தார் சின்னக்குளம் பாடசாலையில் மரம் நடுகை நிகழ்வு

ஜனாதிபதியின்  சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் பிரகாரம் இயற்கை வளங்களை பாதுகாத்து பராமரிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா காத்தர்சின்னகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட காத்தர்சின்னகுளம்  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் மரநடுகை நிகழ்வு இன்று  (23)முன்னெடுக்கப்பட்டது.

ஸ்ரீராமபுரம் கிராம சங்கத்தினர் மற்றும் காத்தார்சின்னகுளம்  கமக்கார அமைப்பு  இணைந்து  இந் நிகழ்வினை ஒழுங்கமைத்திருந்தனர்.
இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர் குலசிங்கம் திலீபன் , கிராம அலுவலகர் , சமூர்த்தி அலுவலர் மற்றும் பட்டதாரி பயிலுனர்கள் , ஸ்ரீராமபுரம் மாதர் அபிவிருத்திச் சங்கத்தினர் , காத்தார் சின்னகுளம் கமக்கார அமைப்பினர் , சனசமூக நிலையம் கரப்பனிச்சான்குளம் மற்றும் காத்தார் சின்னகுளம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்