மோட்டார் வாகன திணைக்கள பணிகள் நாளை ஆரம்பம்

கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக இடைநிறுத்தப்பட்ட நாரஹேன்பிட்டியிலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்கள தலைமைக் காரியாலயம் நாளை(24) மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களுடன் தனது சேவையை மீளத் தொடங்கவுள்ளது.

இதற்கமைய இங்கு வருகைதரும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் தொடர்பில், திணைக்களம் அறிவித்துள்ளது.

குறைந்தளவு பணியாளர்களை கொண்டு சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதால், பொதுமக்கள் தங்களுக்கான நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ள வேண்டுமென, திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்