குச்சவெளி பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது…

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் இன்று (24 ) குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களினால் கொண்டுவரப்பட்டது.
 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பிரேரணை அறுதிப் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு    ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக ஒரு வாக்கும் பதிவு செய்யப்பட்டு வரவுசெலவுத்திட்டம் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளுடன்  நிறைவேற்றப்பட்டது.

இம் முறை தவிசாளரினால் சமர்ப்பிக்க வரவு செலவுத் திட்டத்தில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு, திண்மக் கழிவகற்றல்,சுகாதார பாதுகாப்பு, கிராம அபிவிருத்தி,  மகளிர் அபிவிருத்தி, சுற்றுலாத்தலங்களின்  அபிவிருத்தி, Covid-19 பாதுகாப்பு நடவடிக்கைகள், சட்டவிரோத கட்டிடங்களுக்கான நடவடிக்கை போன்ற பல்வேறு கட்டமைப்பின் கீழ் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் இவ்  வரவு செலவுத் திட்டத்தில் 2021 ம் ஆண்டு எதிர்பார்த்த வருமானம் தொகையாக 236,366,200.00 ரூபாயும்   எதிர்பார்த்த செலவின தொகையாக 236,365,977.00 ரூபாயும் உள்ளடக்கியதாக சமர்ப்பிக்கப்பட்டது. மேலும்  இவ் வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை எவையும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.