சூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்:

 

சூறாவளியாக வலுவடைந்தது தாழமுக்கம்:

கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் காணப்பட்ட வலுவடைந்து தாழமுக்கம் (Deep Depression) ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மேற்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்போதும் சூறாவளியாக (Cyclonic Storm) வலுவடைந்து, தென்மேற்கு வங்காள விரிகுடா பிராந்தியத்தில் திருகோணமலையிலிருந்து கிழக்கு- தென்கிழக்காக 400 கிலோமீற்றர் தூரத்திலும், கன்னியாகுமாரியில் இருந்து கிழக்கு- தென்கிழக்காக 90 கிலோமீற்றர் தூரத்திலும் தற்போது (01.12.2020 – 05.30) மையம் கொண்டுள்ளது.

இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட BUREVI எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து, மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, 02 ம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்திதுறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 75 கிலோமீற்றர் முதல் 85 கிலோ மீற்றர் வரை வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. (Gusting to 95km/h).

இது பின்னர் மேற்கு திசையில் நகர்ந்து மன்னார் வளைகுடாவின் ஊடாக 03ம் திகதி காலை இலங்கையை விட்டு வெளியேறி, பின்னர் மேற்கு -தென்மேற்கு திசையில் நகர்ந்து, தமிழ்நாட்டு கரையை கன்னியாகுமரிக்கும் பாம்பன் பிரதேசத்திற்கும் இடையில் 04 திகதி அதிகாலை மீண்டும் ஊடகம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.