காரைதீவு சமுர்த்தி வங்கியில் முதலாவதாக தன்னியக்க (online) வங்கி செயற்திட்டம் ஆரம்பம்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனைக்கு அமைய சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சகல சமுர்த்தி வங்கிகளையும்,சமுர்த்தி மகா சங்கங்களையும் கணனி மயப்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் அம்பாரை மாவட்டத்தில் முதலாவதாக தன்னியக்க வங்கி சேவை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு காரைதீவு பிரதேச சமுர்த்தி வங்கியில் இன்று (02) இடம்பெற்றது

காரைதீவுபிரதேச செயலாளர் எஸ் . ஜெகராஜன் முன்னிலையில்,
பிரதேச சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ் அவர்களின் தலைமையில் ,
காரைதீவு சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன்
அவர்களும் மற்றும் விஷேட அதிதியாக காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்தீபன்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ரி.மோகனகுமார்,
கணக்காளர் என்.ஜயசர்மிகா, சமூர்த்திக் தலைமை பீட முகாமையாளர் எம்.எச் .அச்சு முகம்மட் மற்றும் சமுர்த்தி நிலைய உத்தியோகத்தர்கள் ஆகியோரும் மற்றும் சமுர்த்தி பயனாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .

இதன் போது சமுர்த்தி பயனாளர்ளுக்கு புதிய தன்னியக(online) சேவை வழங்கி வைக்கப்பட்டதுடன் , வீடமைப்புக்கான கடனுதவி காசோலையும் வழங்கப்பட்டதுடன், மேலும் சமூர்த்தி வங்கி உத்தியோகத்தகர்களுக்கான டீ சேர்ட் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் சுற்று சூழலை அழகுபடுத்தும் முகமாக வங்கி அருகில் உள்ள சுற்று சூழல் பகுதியில் மரக்கன்றுகள் அதிதியினால் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் அதிதிகள் இதன் போது கெளரவிக்கப்பட்டனர்.

 

 

(எம்.என்.எம் .அப்ராஸ்)

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.