தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கல்முனைத் தொகுதி மக்கள் நம்பிக்கை இழக்க காரணம் ஒரு சில மாநகரசபை உறுப்பினர்களே !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கல்முனைத் தொகுதி மக்கள் நம்பிக்கை இழக்க காரணம் ஒரு சில மாநகரசபை உறுப்பினர்களே எனஇலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் துணைச் செயலாளர் நிதான்சன் குற்றம் சாட்டினார்.

கல்முனைவடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார் .

 

கல்முனை தொகுதி மக்களும் இளைஞர்களும் கட்சியின் மீது பாரிய அதிருப்தி அடைந்துள்ளனர்.காரணம் வடக்கு பிரதேச செயலகத்தின் போதான முஸ்தீப்புக்கள் நடந்த போதிலும் அது முழுமை அடையவில்லை என்பதால் ஆகும்.

பாராளுமன்ற தேர்தலில் 30000வாக்குகளை இழந்தமைக்கு அம்பாறையில் பிரதான தாக்கம் செலுத்தியது இந்த விடயமே ஆகும்.
அவ்வாறு நிலையில் இருக்க கட்சியின் தலைமைப்பீடம் மக்களின் நலன் சார்ந்து முடிவுகளை எடுக்கும்படியே உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுக்கு பணித்து இருந்தது.ஒருசிலர் மக்கள்,பொது அமைப்புக்கள் என்பவற்றின் கருத்தினை ஏற்காது செயல்பட்டமையால் மக்கள் பாரிய அதிருப்தி அடைந்துள்ளனர்

கல்முனை மக்களின் நிலையை உணராத ஒரு சில மாநகரசபை உறுப்பினர்களின் செயல்பாடும் தான்தோன்றித்தனமாக மக்கள் விருப்புக்கு மாற்றாகவும் தலைமைக்கு ஒரு கதையும் மக்களுக்கு ஒரு கதையுமாக ஏமாற்றி வந்தமையாலேயே உள்ளூராட்சி சபை தேர்தலில் பெற்ற வாக்குகள் கூட இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பாராளுமன்ற தேர்தலில் பெற முடியாமல் போனது..!

இவர்களின் சுயநலத் தேவையால் கட்சியின் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்துக்கு எதிரான மனநிலையுடன் உள்ள கல்முனை மாநகரசபைக்கு ஆதரவு வழங்கியது ஒட்டுமொத்த கல்முனை தமிழர்கள் மத்தியில் வெந்த புண்ணில் வேலை பாச்சிய செயலாகும்.தொடர்ந்தும் மக்களின் மனங்களை எதிர்த்து வெறுத்து செயல்படும் நிலைமை காணப்படுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பாக கல்முனையில் காணாமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளது.அதுமாத்திரமின்றி இவ்வாறு விருப்பத்துக்கு மாறாக செயல்படும் மாநகரசபை உறுப்பினர்கள் கல்முனையை அடமானம் வைத்து தங்களது சுயலாபத்தை பெற்றுகொள்கின்றார்களா? என சந்தேகம் நிலவுகின்றது கல்முனை மக்களின் இதய பொருள் கல்முனை வடக்கு பிரதேச செயலகமாகும் அதனை அதனை இல்லாதொழிக்க முயற்சி செய்யும் கல்முனை மேயருக்கு ஆதரவு வழங்கிய மாநகர சபை உறுப்பினர்களை புறக்கணியுங்கள்.கட்சி மக்களுக்கானதாக முடிவினை எடுக்கவே பணித்தது.மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டவர்களை புறக்கணியுங்கள் கட்சி மக்களுடனே பயணிக்க விரும்புகின்றது என்றார் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.