உலக உணவுத்திட்டம், நிகழ்ச்சித்திட்டத்தினூடாக தேறாங்டல் குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டது

உலக உணவுத்திட்டம் நிகழ்ச்சித்திட்டத்தில் (R five N) என்னும்வேலைத்திட்டத்தினூடாக முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேசசெயலகத்தில் அமைந்துள்ள தேறாங்கண்டல் குளத்தில் 08.12.2020 இன்றையதினம் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டசெயலர் க.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற இச்செயற்றிட்டத்தில், நக்டா அமைப்பும் இணைந்திருந்தது.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,

குறிப்பாக உலக உணவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் ( R five N) என்னும் வேலைத்திட்டமானது துணுக்காய் பிரதேசசெயலகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுவரும் அதேவேளை இவ்வேலைத்திட்டமானது சுமார் மூன்று வருடங்களுக்கு மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந் நிலையில் துணுக்காய் பிரதேசசெயலகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு, குறித்த ( R five N) வேலைத்திட்டத்தில் தேறாங்கண்டல், அனஞ்சியன்குளம், ஆலங்குளம் ஆகிய கிராமஅலுவலர் பிரிவுகள் உள்ளீர்க்கப்பட்டதுடன், இவ்வருடம் புத்துவெட்டுவான், ஐயங்கன்குளம், உயிலங்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இத்திட்டத்தினூடாக மக்களுக்கு கால்நடைவளர்பு, காளான் வளப்புபோன்ற செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதுடன், குளங்களில் மீன்குஞ்சுவிடும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் இத் திட்டத்தினூடாக நன்நீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை ஊக்குவிக்கும்பொருட்டு, முல்லைத்தீவு மாவட்ட செயலர் க.விமலநாதன் தலைமையில், நக்டா அமைப்பு இணைந்து இவ்வாறு தேறாங்கண்டல் குளத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந் திகழ்வில் முல்லைத்தீவு மாவட்டசெயலர் க.விமலநாதன், துணுக்காய்பிரதேசசெயலர் ஆ.லதுமீரா, முல்லைத்தீவுமாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.ஜெயபவானி கணேசமூர்த்தி, முல்லைத்தீவுமாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் புனிதகுமார், வ.கஜானனன், மாவட்ட நீரியல்வள விரிவாக்க உத்தியோகத்தர், துணுக்காய் கால்நடை அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாயபோதனாசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

(விஜயரத்தினம் சரவணன்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.