கொழும்பில் கொரோனா தீவிரம்! – நேற்று மாத்திரம் 371 பேருக்குக் தொற்று

இலங்கையில் நேற்று கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 703 பேரில் 371 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

அவர்களில் பொரளைப் பகுதியில்192 பேரும், கொம்பனி வீதியில் 32 பேர்ரும் மற்றும் தெமட்டகொட பகுதியில் 32 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியிலிருந்து நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 706ஆக உயர்ந்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் நேற்று 102 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் 51 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 51 பேரும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 46 பேரும் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 25 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 22 பேரும், காலி மாவட்டத்தில் 05 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 05 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 02 பேரும் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குருநாகல், மாத்தளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.