வவுனியாவில் இரு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்து : ஒருவர் காயம்

வவுனியா வைரவப்புளியங்குளத்தில் இரு மோட்டார் சைக்கில்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் இன்று (13) காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ் விபத்துச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா நகரிலிருந்து குருமன்காடு சந்தி நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் குருமன்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிலும் வைரவப்புளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தினை அண்மித்த பகுதியில் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானது.’
இவ் விபத்தில் இரு மோட்டார் சைக்கில்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன்  ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்