அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிய நான்கு முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காலக்கெடு!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுத்த மூலம் விளக்கமளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் முடிவை மீறி 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து  வாக்களித்தமைக்கான காரணங்களை எதிர்வரும் 30ம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு பணிக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி கூடி தீர்மானிக்கவுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமின் பணிப்புரைக்கு அமைய பதவி வழி உத்தியோகத்தர்கள் பங்குபற்றிய கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (13)கொழும்பில் நடைபெற்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தித்திற்கு ஆதரவாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் வாக்களித்ததன் தொடர்பிலும், அதன் பின்னரான அவர்களின் நடவடிக்கை தொடர்பிலும் விளக்கம் கோருவதற்காகவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இதற்கான அவசியத்தை வலியுறுத்தியதன் பின்னர் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபீஸ் நசீர் அஹமட் ஆகியோர் தாம் அவ்வாறு நடந்து கொண்டற்கான காரணங்களை வாய்முலமாக கூறியுள்ளனர்.

இதுபற்றி ஆராயப்பட்ட போது கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினர்களும் தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.

அதனையடுத்து இந்த விடயத்தில் முக்கியமான முடிவை மேற்கொள்வதற்கு, உரிய காரணங்கள் எழுத்து மூலம் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் தலைவருக்கும், செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

இதன்பின்னர் மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மீதும் மேற்கொள்ளப்பட  வேண்டிய நடவடிக்கை குறித்து கட்சி முடிவெடுக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.