யாழில் 1,144 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்-மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மருதனார்மட சந்தை கொவிட்-19 பரவலால் 400 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மாவட்டச் செயலாளர் க. மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (14)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகேசன் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்தில் இவ்வாண்டு ஒக்டோபர் நான்காம் திகதிக்குப் பின்னர் 59 கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 31 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மருதனார்மட சந்தை கொவிட்-19 பரவலையடுத்து மேலும் 400 குடும்பங்கள் கடந்த மூன்று நாள்களில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணத்தில் 1,144  குடும்பங்கள்சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேவேளை மருதனார் மட சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வியாபார நிலையங்கள் என்பன மறுஅறிவித்தல் வரை மூட உத்தரவிட்டுள்ளதாக” கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.