காங்கேசன்துறை சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்தது
காங்கேசன்துறை கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை கோபுரம் சாய்ந்துள்ளது.
நேற்று (19) இரவு, பொழிந்த கடும் மழையின்போது இந்தக் கோபுரம் சாய்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சுனாமி, கடும் மழையுடன் இடைக்கிடையில் ஏற்படும் வெள்ளம், மண்சரிவு மற்றும் வான் கதவுகள் திறக்கப்படுவதால் ஏற்படும் வெள்ள நிலமை மற்றும் காலநிலை முன் எச்சரிக்கைகளை இந்த சுனாமி எச்சரிக்கை கோபுரங்களைப் பயன்படுத்தி கணிப்பிடப்பட்டது.
இதேவேளை, காங்கேசன்துறை கடற்கரையில், கடல் அரிப்பு ஏற்படுவதாவும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை