யாழ்மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி…

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதை அடுத்து யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வர் பதவிக்கான தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

இதற்கான அறிவித்தலை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டிறஞ்சன் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம கடந்த 16ஆம் திகதி, மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட்டினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

இதனையடுத்து, 3 வாக்குகளினால் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதனால், சட்ட ஏற்பாடுகளுக்கமைய மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பதவி இழக்க நேரிட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.