கேகாலை நாட்டு வைத்தியரின் கொவிட் தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களம் அனுமதி

கேகாலை தம்மிக பண்டாரவினால் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு தேசிய ஔடதத்திற்கு ஆயுர்வேத திணைக்களத்தின் சூத்திர குழு அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த ஔடதம் ஏற்கனவே தேசிய மருத்துவத்தால் விஞ்ஞான ரீதியாக உணவு நிரப்பியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, சுய விருப்பத்தின் பேரில் குறித்த ஔடதத்தை பெற்றுக்கொள்வதை தடுக்க முடியாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.