துறைநீலாவணையில் மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு
களுவாஞ்சிகுடி- துறைநீலாவணை பகுதியில், மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது.
நேற்று (21) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், துறைநீலாவணை 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான முருகேசு புலேந்திரன்(வயது-61) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர், நேற்று மாலை இரும்புக்கத்தியை வீதியால் எடுத்துச்செல்லும்போது, வீதியின் அருகாமையிலுள்ள மின்மாற்றியின் உயரழுத்தம் மின்சாரக்கம்பியில் தவறுதலாகப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த நபர், மின்சாரத்தால் தாக்கப்பட்டு வீதியில் இழுத்து வீசப்பட்டுள்ளார்.
இதனைக் கண்ணுற்ற பிள்ளைகள், உறவினர்கள் மின்சாரத்தால் தாக்கப்பட்ட அவரை, கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும்போது வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தால் துறைநீலாவணையில் சுமார் 20 நிமிடம் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றார்கள்.
உயிரிழந்தவரின் சடலம், கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கருத்துக்களேதுமில்லை