பல்கலைகழக வெட்டுப்புள்ளி(Z-Score ) தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப்புள்ளியின் (Z Score) அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் தள்ளுபடி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சித்தியடைந்த 42 மாணவர்களினால் குறித்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்