மேல் மாகாணத்தில் மாத்திரம் இதுவரையில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று
மேல் மாகாணத்தில் இதுவரையில் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு மாவட்டத்தில் 15 ஆயிரத்து 875 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 8 ஆயிரத்து 183 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 876 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், கண்டி மாவட்டத்தில் ஆயிரத்து 394 பேருக்கும், காலி மாவட்டத்தில் 572 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 691 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 96 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 105 பேருக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 161 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை