திருடர்களிடம் இருந்து விழிப்பாக இருங்கள்-பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண

பண்டிகைக்காலம் ஆரம்பமானதைத்தொடரந்து குற்றவாளிகள் மற்றும் திருடர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதனால் இந்த பண்டிகை காலத்தில் பயணங்களை மேற்கொள்ளும்போது குற்றவாளிகள் மற்றும் திருடர்களிடமிருந்து விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் பணம் மற்றும் நகைக்கொள்ளை போன்ற சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே பயணங்களில் ஈடுபடுகின்ற சந்தர்ப்பங்களில் தமது பணம் மற்றும் நகைகள் சம்பந்தமாக மிக அவதானமாக இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.