வவுனியா உலுக்குளம் பகுதி சுகாதார பிரிவினரினால் முடக்கம் : 15 குடு்ம்பம் தனிமைப்படுத்தலில்

பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து வவுனியா, உலுக்குளம் கிராமம் முடக்கப்பட்டு அக்கிராமத்தினை சேர்ந்த 15 குடும்பத்தினர் அவர்களின் வீடுகளின் இன்று (26.12.2020) காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா வைத்தியசாலையில் கடந்த புதன்கிழமை காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த பெண் நடமாடிய இடங்கள் மற்றும் அவருடன் தொடர்புகளைப் பேணியவர்ளை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் குறித்த பெண் தங்கயிருந்த நோயாளர் விடுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு கடமையில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
அத்துடன், குறித்த பெண்ணின் கிராமமான பெரிய உலுக்குளம் பகுதி சுகாதார பிரிவினரால் இன்று (26.12) காலை முடக்கப்பட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.