பிரதமர் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக தீபமேற்றினார்

சுனாமி பேரழிவில் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2020.12.26)  பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் தீபமேற்றி அனைவருக்கும் அக வணக்கம் செலுத்தினார்.

முதலில் சுனாமியில் உயிரிழந்தவர்களின் நினைவாக முற்பகல் 9.25 மணிமுதல் முற்பகல் 9.27 வரையான இரு நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்திய  பிரதமர், அதனை தொடர்ந்து தீபமேற்றி உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.

சுனாமி பேரழிவு இடம்பெற்று இன்றுடன் 16 ஆண்டுகளாகின்றன. அக்கொடிய பேரழிவில் சுமார் 40 ஆயிரம் இலங்கையர்கள் உயிரிழந்தனர்.

பேரழிவில் பல அன்புக்குரியர்வர்கள் உயிரிழந்தது மாத்திரமின்றி, அவர்களது இருப்பிடங்களையும் இழந்து, அந்த குடும்பங்களை சேர்ந்த இலட்சக் கணக்கானோருக்கு தங்களது வாழ்க்கையை புதிதாக ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டது என இதன்போது கௌரவ பிரதமர் நினைவுகூர்ந்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.