மஸ்கெலியாவில் கொரோனா விழிப்புணர்வு!
மஸ்கெலியா பகுதியிலுள்ள தோட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவுதலை தடுப்பதற்காக மஸ்கெலியா பிரதேச வைத்திய சுகாதார பிரிவுக்குட்ட பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் தோட்ட வைத்தியர்கள் மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள் இணைந்து தோட்டங்கள் பொது இடங்கள் பஸ் சாரதிகள் பயணிகள் உட்பட அனைத்து நபர்களை தெளிவு படுத்தும் நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த செயத்திட்டத்திற்கமைய மானெலு தோட்டத்தில் ஆரம்பித்து மாக்கலை, கவரவெல, கிங்கொரா, சாமிமலை நகரம், ஸ்டர்ஸ்ப்பி, கொழும்பு தோட்டம், பெரிய, சிறிய சோலங்கந்த தோட்டங்கள், ஸ்டோக்கம் உள்ளிட்ட தோட்டங்களுக்கு சென்று தொழிலாளர்கள் பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என அனைத்து பிரிவனருக்கும் கையேடுகள் வழங்கி இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விளக்கங்களை அளித்து வருகின்றனர்.
இதன் போது சுகாதார வழிமுறைகளுக்கமைய ஒரு மீற்றர் இடைவெளி பேணுதல், கை கழுவுதல், தொற்று நீக்கம் பயன்படுத்துதல் முகக்கவசம் கட்டாயம் அணிதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளனர்.
அது மாத்திரமின்றி ஒலி பெருக்கிகள் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டன.
இந்நிகழ்வில் பொது சுகாதார அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்கள் தோட்ட வைத்தியர்கள் உட்பட பலரும் இணைந்து கொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை