வடக்கில் முதல் கொரோனா சாவு! – வவுனியாவைச் சேர்ந்த பெண் மரணம்

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா பொது வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண்ணுக்குக் கொரோனாத் தொற்று இருப்பது நேற்று உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றுக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு அநுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்குக் கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

குறித்த பெண்மணி இன்று வவுனியா வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி அநுராதபுரம் மித்சிறி செவன் வைத்தியசாலையில் சாவடைந்துள்ளார்.

அவருக்கு, நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.