கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞர் தப்பியோட்டம் – கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரல்

சப்புகஸ்கந்த  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகொல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர்  தப்பிச் சென்றுள்ள நிலையில்,  குறித்த இளைஞரை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் பொது மக்களிடம் உதவி  கோரியுள்ளனர்.

இவ்வாறு தப்பியோடிய இளைஞருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதன் முடிவுகள் வெளியாகும் வரை அவர் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதற்கமைய, குறித்த இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஹித் ரோஹன தெரிவிக்கின்றார்.

மாகொல வடக்கு, தேவலய வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த இளைஞர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருப்பின்  அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது பொலிஸ் அவசர எண்ணிற்கு தொடர்புகொண்டு தெரிவிக்குமாறும் பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கோண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்