கண்டி -கலகெதர பிரதேசத்தில் ஏற்பட்ட பாாிய விபத்து!
கலகெதர – ரம்புக்கன வீதியில், கலகெதர பேருந்து நிலையத்திற்கு அண்மையில் ஏற்பட்ட விபத்தொன்றில் நபரொருவர் உயிாிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரம்புக்கனையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கொள்கலன் ஊர்தியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி உட்பட அவ்விடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி மற்றும் இரு முச்சக்கர வண்டிகளில் மோதுண்டதால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
பின்பு குறித்த கொள்கலன் ஊர்தி அருகிலிருந்து வர்த்தக நிலையத்தினுள் சென்றுள்ளதோடு இச்சம்பவத்தில் 53 வயதான கொள்கலன் ஊர்தியின் சாரதி உயிாிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும், வர்த்தக நிலையத்தில் இருந்த ஒருவரும், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரும் காயமடைந்து கலகெதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தொிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை