விளையாட்டு உபகரணம் வழங்கி வைத்த பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்…
கனகபுரம் பீனிக்ஸ் விளையாட்டுக் கழக நிர்வாகம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனிடம் விடுத்த வேண்டுகோளுகிணங்க கழகத்தின் பதினாறு வீரர்களுக்கான உதைபந்தாட்ட காலணிகள் தவிசாளராலும் மற்றும் சீருடைக்கள் ஜெயக்குமார் அவர்களாலும் ஒழுங்கு படுத்தப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்ட்து.
காலை ஒன்பது முப்பது மணிக்கு கழகத்தின் தலைவரும் மாவட்ட செயலக உத்தியோகத்தர் ரெஜி அலோசியஸ் தலைமையில் ஆரம்பமாகியது.
இங்கு மாவட்ட செயலக விளையாட்டு பயிற்றுவிப்பாளர் குமார் மற்றும் கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக் செயலாளர் சுதா , கட்சியின் இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர் ஞானம் கனகபுரம் கிராம அபிவிருத்தி சங்கம் கனகபுரம் அமைப்பாளர் அன்பரசி மற்றும் J P டெக்னாலஜி ஷொப் உரிமையாளர் ஜெயக்குமார் அணி வீரர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை