வீரமுனை மற்றும் அண்டிய தமிழ் கிராமங்களில் பரபரப்பை ஏற்படுத்திய ரஜிதரன் (அசோக்) – கொலை சம்பவம் …
உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட
சம்மாந்துறை- வீரமுனையை சேர்ந்த கணேசமூர்த்தி ரஜிதரன் (அசோக் ) (வயது30) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று(29) மாலை மரணமடைந்தார் .
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது
முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் சிலர் சேர்ந்து தாக்கியதில் பலத்த வெட்டு காயங்களுடன் உள்ளாகிய நிலையிலே இவரை வைத்தியசாலையில் சேர்த்தாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .
சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்
இவ் சம்பவம் வீரமுனையிலும் இதனை அண்டிய தமிழ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்துக்களேதுமில்லை