சவால்களை முறியடித்து அபிவிருத்திக்கான ஆண்டாக இவ்வாண்டை மாற்றியமைப்போம் அங்கஜன் எம்.பி புதுவருட வாழ்த்து செய்தி…

சவால்களை முறியடித்து அபிவிருத்திக்கான ஆண்டாக 2021ஆம் ஆண்டினை மாற்றியமைப்போம் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தனது ஆங்கில புத்தாண்டு தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மலர்ந்துள்ள இந்தப் புத்தாண்டானது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்கும் செழிப்பானதும்,மகிழ்ச்சிகரமானதுமான ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.
நாட்டு மக்களுடைய நம்பிக்கையையும்,எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றும் ஆண்டாக அமையும் அதேவேளையில் அபிவிருத்திக்கான ஆண்டாகவும் இவ் ஆண்டு அமையும் என நம்புகிறேன்.
பிறந்துள்ள இப் புதுவருடமானது உலக மக்கள் அனைவருக்கும் சவால் மிக்கது.உலகமே கொரோனா எனும் கொடிய நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் இவ் வேளையில் கூட்டாக பண்டிகைகளைக் கொண்டாடாது சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இவ்வருடம் கொரோனா எனும் கொடிய நோயின் பிடியில் இருந்து நாட்டு மக்களை விடுவிக்க இத் தருணத்தில் திடசங்கற்பம் கொள்வோம்.
கடந்த வருடம் எமக்கு பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. அந்தப் படிப்பினைகள் ஊடாக எம்மை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.