தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 2021ஆம் ஆண்டின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் நிகழ்வு
2021 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப்பிரமாண நிகழ்வு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக நிர்வாக கட்டிட முன்றலில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தலைமையில் இடம்பெற்றது.
இங்கு பல்கலைகழக உத்தியோகத்தர்கள் ‘ஒரே நாட்டில், ஒரே தேசத்தில், ஒரே கொடியின் கீழ் ஐக்கியமாகவும், ஒருமித்த மனதுடனும் பாதுகாப்பான எமது தாய்நாட்டினுள் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்ஷத்தின் நோக்கை முன்னிறுத்திய ஒழுக்கமான, சட்டத்தை மதிக்கின்ற பண்பாடுகளை கொண்ட, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்காகவும் நிலைபேறான சுற்றாடல் முகாமைத்துவத்திற்கு முன்னுரிமை வழங்கும் பௌதிக வள அபிவிருத்தியும் ஊடக மக்கள் மைய பொருளாதாரம் ஒன்றை உருவாக்குவதற்கும் நவீன தொழிநுட்ப அறிவை பெற்ற மனித வளங்களை வழிநடத்தும் பரிசுத்த அரச நிர்வாகத்தின் பங்காளரான நான் மக்கள் பணத்தில் சம்பளம் பெரும் அரச ஊழியர் என்ற வகையில் அரச கொள்கைகளையும் குறிக்கோள்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு என்னிடம் ஒப்படைக்கப்படும் பணிகளை வினைத்திறனுடன், பயனுறுதி வாய்ந்ததாக, உறுதியான எண்ணத்துடன், உச்ச அளவு அர்ப்பணிப்புடன், நேர்மையாக, மக்களுக்கு சார்பாக நிறைவேற்றுவதாக பிரமாணம் செய்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், பீடங்களின் பீடாதிபதிகள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நூலகர், நிதியாளர், நிர்வாக அலுவலர்கள், பல்கலைக்கழக கல்விசாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு அரச சேவை உறுதியுரையை எடுத்துக்கொண்டதுடன் நாட்டுக்காக உயிரை பணயம் வைத்து போராடி உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கொரோனா தொடர்பிலான விளக்க உரையை பல்கலைக்கழக வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ரீ. எம். மர்சூக் நிகழ்த்தினார்.
கருத்துக்களேதுமில்லை