நண்பனின் மோட்டார் சைக்கிளைப் பயன்பத்தி திருட்டில் ஈடுபட்ட நபர் சிக்கினார்
(எச்.எம்.எம்.பர்ஸான்)
நண்பன் ஒருவனின் மோட்டார் சைக்கிளை பயன்படித்தி திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரொருவர்நேற்று (2) பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த கேஸ் சிலின்டரை மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் மூன்று நாட்களுக்கு முன்னர் திருடிச் சென்றுள்ளார்.
குறித்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கண்டு பிடிக்க வீட்டார் தீவிர முயற்சியில் ஈடுபட்டு அப்பகுதியிலுள்ள சீ.சீ.ரீ.வி கமெராவின் உதவியுடன் திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை அடையாளம் கண்டுள்ளனர்.
அதை தொடர்ந்து கேஸ் சிலின்டரை களவாடிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நண்பன் ஒருவனின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
குறித்த நபரை பொலிஸார்நேற்று (2) கைது செய்துள்ளதுடன் இத் திருட்டுச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை