சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழு: பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு

சோளப் பயிர்ச்செய்கையில் படைப்புழுதாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நாவலப்பிட்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்

சோளப்பயிர்ச்செய்கையில் ஐந்து வீதம் படைப்புழுத் தாக்கத்தினால் சேதமடைந்திருக்கிறது என்றார். இம்முறைபெரும்போகத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ஹெக்யெடர் பரப்பில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.