கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 182 பேருக்கு கொரோனா!
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இதுவரை 182 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். என்று கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிவைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தெரிவித்தார்.
கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட கல்முனை நகரில் கல்முனை மற்றும் கல்முனைக் குடி ஆகிய பிரதேசங்களிலுள்ள 11 கிராம சேவையாளர் பிரிவுகள் கடந்த 28 ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்தியர். ஏ.ஆர்.எம்.அஸ்மி கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரியாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டு கொரோனா நோயை கட்டுப்படுத்த சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
கருத்துக்களேதுமில்லை