எனக்கு எதிரான போராட்டம் எதிரணியால் சோடிக்கப்பட்ட அரசியல் நாடகம் : தவிசாளர் எம்.எஸ். எம். வாசித்

(நூருள் ஹுதா உமர்)
என்னுடைய தவிசாளர் கதிரையில் ஆசைகொண்ட சிலர் எடுத்த முயற்சியே எனக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம். பொத்துவில் பிரதேச சபை, பொத்துவில் பொதுசந்தை என்னுடைய சொந்த சொத்து அல்ல. அது மக்களின் சொத்து. மக்களின் நலன் சார்ந்த முடிவுகளையே நாங்கள் எடுக்கிறோம் என பொத்துவில் பிரதேச சபை தவிசாளருக்கு எதிரான போராட்டம் தொடர்பில் தவிசாளர் அறையில் இன்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போதே பொத்துவில் தவிசாளர் எம்.எஸ்.எம். வாசித் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,  பல வருடங்களாக வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளுக்கே நாங்கள் நேர்முக தேர்வு நடத்தி நீதியான முறையில் சந்தை கட்டிட தொகுதியின் கடைகளை பங்கிட்டு கொடுத்துள்ளோம். எல்லோரும் முன் வரிசையில் கடை ஒதுக்கித்தர வேண்டும் என்று கேட்டால் அது எப்படி சாத்தியமாகும்.
பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ எதிரணி உறுப்பினர்கள் எங்களிடம் கேளாமல் செய்தவிடயமாக சந்தைக்கடை விவகாரத்தை கூறியிருப்பது அப்பட்டமான பொய். அவர்களிடம் ஆலோசனை செய்து அவர்களிடம் அனுமதி பெற்ற சான்றுகள் மற்றுமின்றி எங்களிடம் அவர்களால் வைத்து தரப்பட்ட ஒப்பங்களும் உண்டு.
இது முழுமையாக அரசியல் காய் நகர்த்தலே. என்னுடைய தவிசாளர் கதிரைக்கு குறிவைத்து நடத்தப்பட்ட நாடகம். இந்த சந்தை கட்டிட கடை ஒதுக்கீட்டில் கட்சி பாகுபாடுகள், விருப்பு வெறுப்புக்கள் எதையும் கருத்தில் கொள்ளாமல் நீதமாக நடந்துள்ளோம்.
நான் உறுப்பினர்களின் கருத்துக்களை உள்வாங்கிய வரவுசெலவு திட்டத்தை தயாரித்தேன். என்னுடைய கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிராக வாக்களித்தனாலையே வரவு செலவு அறிக்கை தோல்வியை சந்தித்தது. ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டோம். எனக்கு எதிராக பின்முதுகில் குத்துவோர் இறைவனை பயந்து கொண்டு நடக்க வேண்டும் என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.