தமிழ் தேசிய  கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளோம் ! -(கருணா)விநாயகமூர்த்தி முரளிதரன்

தேசிய கட்சிகளுடன் இல்லை. தமிழ்க் கட்சிகளுடனேயே மாகாண சபை தேர்தலை சந்திப்பேன் எனவும், தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைய தயாராக உள்ளதாகவும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “எமது கட்சியான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற கட்சியை பலப்படுத்துவதற்காக இன்று கிளிநொச்சியில் முக்கிய சந்திப்புக்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

உண்மையில் கடந்த தேர்தலில் எமது கட்சிக்கு அம்பாறை மாவட்ட மக்கள் ஆதரவு வழங்கி இருந்தார்கள். உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களாகவும் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் எமது கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளது. அதனை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உண்மையில் மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ளோம். அதற்கான வேட்பாளர்களையும் தெரிவு செய்துள்ளோம். ஆனால் தேசிய கட்சியுடன் இணைந்து அல்ல.

தமிழ் கட்சிகளுடன் இணைந்தே போட்டியிட தீர்மானித்துள்ளோம். தமிழ் கட்சிகளுடன் இது தொடர்பாக பேச்சுவார்தைகளில் ஈடுபட்டு அனைவரையும் ஒன்றாக இணைத்து போட்டியிடுவது என்ற முடிவில் இருக்கின்றோம்.

தமிழ்த்தேசிய  கூட்டமைப்பு நாம் உருவாக்கிய கட்சி. அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டியும், விமர்சித்தும் உள்ளோம். அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கும் தயாராகவே உள்ளோம்.

தமிழ் கட்சியக் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்காக தமிழ்த் தலைவர்கள் முன்வர வேண்டும். தமிழ்த் தலைமைகள் கடந்த கால செயற்பாடுகள், அரசியல்களை விட்டு தற்போது காணப்படும் சூழலை கருத்தில் கொண்டு ஒற்றுமையாக செயற்பட முன்வர வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.