ஹல்தும்முல்ல வல்ஹப்புதென்னை பிரதேசத்தில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்; 13 பேர் காயம்

ஹல்தும்முல்லயிலிருந்து பலாங்கொடை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் வேன் ஒன்று ஹல்தும்முல்ல வல்ஹப்புதென்னை பிரதேசத்தில் பள்ளத்தில் வீழ்ந்ததில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் ஹல்தும்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக தியதலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஹப்புத்தளை லிப்டன் சீட்டை பார்வையிடுவதற்காக சென்று மீள் திரும்பிக் கொண்டிருந்த வேளையிலேயே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.