இலங்கைக்கு நாளை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர்
மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளை (05) நாட்டிற்கு வருகைத் தரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது.
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பிற்கு அமையவே, இந்திய வெளிவிவகார அமைச்சர் நாளை இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட தரப்பினரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு மேலும் குறிப்பிட்டது.
கருத்துக்களேதுமில்லை